கலைஞரின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல்
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை 28வார்டில் கலைஞர் முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 28வார்டு தாமரை நகர் வட்ட செயலாளர் கோபி சரவணன் தலைமையில் திமுக நகர செயலாளர் கார்த்திக் வேல் மாறன் முன்னிலையில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திரளான கட்சி தொண்டர்கள் பொது மக்கள் கலந்து கொண்டார்.
எமது செய்தியாளர் : மதன் குமார் மற்றும் வினோத்
கருத்துகள் இல்லை