Header Ads

  • சற்று முன்

    சார்பட்டா பரம்பரை படத்திற்கு கண்டனம் தெரிவித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

    திரையில் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர், முதலமைச்சரான பிறகு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் எண்ணற்ற சலுகைகளை வழங்கினார். நலிவடைந்த வீரர்களுக்காக, அரசின் நிதி அளித்து சர்வதேச போட்டிகளில் அவர்களை பங்கேற்க செய்து அழகு பார்த்தார். ஆனால், சார்பட்டா பரம்பரை திரைப்படம் திமுக ஆட்சியில் மட்டுமே விளையாட்டு வீரர்கள் மதிக்கப்பட்டது போலவும், எம்ஜிஆர் அவர்களை கைகழுவியது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    எம்ஜிஆர் அவர்களது படங்களில் விளையாட்டு வீரராக ஏற்று வரும் கதாபாத்திரங்கள் என்னை போன்ற எண்ணற்றவர்களுக்கு வீர விளையாட்டுகளின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் மிகையாகாது . எத்தனையோ வீரர்களை ஊக்குவித்த, மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை சார்பட்டா பரம்பரை படத்தில் தவறாக சித்தரித்து உள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மேலும் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad