தொலைக்காட்சி பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் விபத்து! தோழி உயிரிழப்பு !
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே ஈசிஆர் சாலையில் நள்ளிரவு கார் நிலை தடுமாறி செண்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த தனியார் தொலைக்காட்சி பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் காயங்களுடன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடன் பயணம் செய்த அவரது தோழி பவானி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பவானியின் உடலைக் கைப்பற்றிய மாமல்லபுரம் போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை