Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நியாயவிலைக் கடைகளை திடீரென ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்காவுக்கு உட்பட்ட பச்சூர்  தொடக்க  வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்கத்தின் கீழ் இயங்கும் அனைத்து நியாயவிலைக் கடைகள்   பச்சூர் ,கொத்தூர், காந்திநகர், பழைய பேட்டை நியாயவிலை  கடைகளை திடீரென மாவட்ட ஆட்சியர்  அமர்குஷ்வாஹா அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்

    தமிழக  முதலமைச்சர் ஆணைக்கிணங்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு செய்ததின்  அடிப்படையில்  திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் இன்று தமிழக எல்லையோர பகுதியிலுள்ள குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டத்தின் எல்லை பகுதியான காந்திநகர் நியாயவிலைக் கடைகளை ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு சரியான முறையில் அரிசி ,பருப்பு ,பாமாயில், மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார். மேலும் நியாவிலை  கடைகளில் இருப்பு எவ்வளவு உள்ளது என காந்திநகர் நியாய விலை கடை ஊழியரிடம் கேட்டு அறிந்து அவராகவே முன்வந்து கடைக்குள் ஆய்வு மேற்கொண்டார். இதில் காந்திநகர் பகுதியில் உள்ள நியாய விலை கடையின் அருகிலுள்ள பொதுமக்களிடம் முறையாக அரிசி வழங்கப்படுகிறதா என பொதுமக்களிடம் கேட்டறிந்தார். 

    மேலும் மாவட்ட ஆட்சியர் உடன் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் மகாலட்சுமி மற்றும் உணவு வட்ட வழங்கல் அதிகாரி விஜய் ஆகியோர் உடன் இருந்தனர்.


    எமது செய்தியாளர் : நித்தியானந்தம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad