ரயிலை துரத்திச் சென்று 3.5டன் அரிசி பறிமுதல்! வட்டார வளர்ச்சி அலுவலர் அதிரடி!.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சோமநாயக்கன் ரயில்வே கேட் உள்ளது. இங்கே மதியம் 2 மணி அளவில் ஆந்திராவுக்கு செல்லும் பேசஞ்சர் ரயில் வருகிறது. இந்த ரயிலில் தினமும் சுமார் மூன்று டன்னுக்கும் மேற்பட்ட அரிசிகள் ஆந்திராவுக்கு கடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று வட்டார வளர்ச்சி அலுவலருக்கு 3.5 டன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் மற்றும் உதவியாளர் அருள் பாண்டியன் மற்றும் கிருஷ்ணன் செல்வதற்குள் ரயில் சென்றுவிட்டது. இருப்பினும் ரயிலை சுமார் 15 கிலோமீட்டர் பின்தொடர்ந்து பச்சூர் ரயில்வே கேட் அருகே நிறுத்தி பரிசோதனை செய்ததில் 3.5 டன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்த கடத்தல் அரிசியை நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.ரயிலில் கடத்தப்பட்ட அரிசியை 15 கிலோமீட்டர் தூரத்தில் சென்று பிடித்த வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
எமது செய்தியாளர் : நித்தியானந்தம்
கருத்துகள் இல்லை