Header Ads

  • சற்று முன்

    சிவகங்கையில் கொரோனவை விரட்டும் மூலிகை சூப்

    சிவகங்கையில் இளைஞர்கள் ஒன்று கூடி மூலிகை சூப்பை பொதுமக்களுக்கு கொடுத்து தங்கள் கிராமத்தில் கொரோனா தொற்றால் யாரும் பாதிக்காத வண்ணம் பார்த்து கொள்கிறார்கள்.



    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட கானுர் கிராமம் கொரொனா இல்லாத கிராமமாக திகழ்கிறது. 500 குடும்பங்களுக்கு மேல் இந்த கிராமத்தில் வசித்து வருகிறார்கள்.கானுர் கிராமத்து இளைஞர்கள் உண்மை, உழைப்பு, உயர்வு என விளையாட்டாக 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த வாட்ஸ் அப் குழுவின் மூலம் தங்கள் கிராமத்திற்க்கு தேவையான அனைத்து விதமான நலத்திட்ட உதவிகளையும் இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் ஒன்று கூடி திட்டம் தீட்டி செய்படுத்தி வருகின்றனர்.கொரொனா முதல் அலையின் போதும் மிகத்தெளிவாக செயல்பட்டு எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்து விடாதபடி கிராமத்து இளைஞர்கள் பார்த்து கொண்டனர். அதே போன்று இரண்டாம் அலை உச்சத்தில் உள்ள இந்த நிலையில் கிராமத்தில் யாருக்கும் கொரொனா நொய் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக உள்ளனர்.

    எதிர்ப்பு சக்தி 

    கிராம மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை எந்த வகையான உணவுகளின் மூலம் அதிகப்படுத்தலாம் என்று தினமும் கானுர் கிராம மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர், முருங்கை சூப், வாழைத்தண்டு சூப், காளான் சூப் முளைகட்டிய பயிறு வகைகள், வேர் கடலை என பெரியவர் முதல் சிறியவர்கள் வகை அனைத்து வயதினருக்கும் உண்மை உழைப்பு உயர்வு குழுவினர் வழங்கி வருகின்றனர்.

    கைப்பக்குவம் 

    செனையில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்த பொன்முத்தராமலிக்கம், கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊரான கானுருக்கே திரும்பினார். அவரின், கைப்பக்குவத்தில் தான் தற்போது சத்தான சூப் விநியோகிக்கப்படுகிறது.


    தயார் செய்யும் பணிகள் அதிகாலை 4 மணிக்கே மூலிகை சூப், கடலை வகைகளை தயார் செய்யும் பணி தொடங்கப்பட்டு, 7 மணிக்குள் மொத்த கிராம மக்களுக்கும் அவை விநியோகிப்படுகின்றன. கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வரும் நிலையில் இந்த இளைஞர்களோ கிராம மக்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad