Header Ads

  • சற்று முன்

    டெல்லியில் தடுப்பூசி மையங்கள் கடந்த 4 நாள்களாக மூடப்பட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்

    டெல்லியில் தற்போது தடுப்பூசி இல்லை. 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி மையங்கள் கடந்த 4 நாள்களாக மூடப்பட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருந்து வருகிறது. கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு விரைந்து அனுப்ப வேண்டும் என்று அந்தந்த மாநிலங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் கொரோனா தடுப்பூசி இல்லை என்றும் கடந்த 4 நாள்களாக 18-44 வயதினருக்கான தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- 

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முற்பட்ட போது மாநிலங்களோடு ஒப்பந்தம் போட நிறுவனங்கள் மறுக்கின்றன.  தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசிகளைப் பெற மத்திய அரசால் மட்டுமே முடிகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் மாநில அரசுகள் தோல்வி அடைந்தால் அது இந்தியாவின் தோல்வி தான். மத்திய அரசு விரைவாக தடுப்பூசியை இறக்குமதி செய்து மாநிலங்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்றார்.


    மேலும் கொரோனாவுக்கு எதிரான போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்கினால், மாநிலங்களிடம் அந்த பிரச்னையை விட்டுவிடுமா மத்திய அரசு? உ.பி. டேங்குகளையும், டெல்லி ஆயுதங்களையும் வாங்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad