கழிவுநீர் மற்றும் வடிகால் வாரியம் அலட்சியம்
சென்னை கொடுங்கையூர் மண்டலம்4 வார்டு 34குட்பட்ட கட்டபொம்மன் மெயின் தெருவில் சாலையின் நடுவே திடிரென ஏற்பட்ட பாதாள குழியால் வாகன ஓட்டிகள் அச்சம். இந்த பாதாள குழியினால் கழிவுநீர் வடிகால் உடைந்து கசிவு ஏற்பட்டு பெரிய பள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது . சாலையின் நடுவே கழிவுநீர் வடிகால் உடைந்து கசிவு ஏற்பட்டதால் துற்நாற்றம் வீசுகின்றன. பாதாள குழியருகே தனியார் மருத்துவ கிளினிக், மருந்தகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. நோய் தொற்று ஏதேனும் பரவ வாய்புள்ளதாக பொதுமக்கள் அச்சபடுகின்றன.மேலும் சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தின் அருகே நான்கு சக்ர வாகனங்கள் கடந்துசெல்லும் போது மேலும் பெரிய பள்ளமாக உருவாக வாய்ப்புள்ளதாக பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். .இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்லும் போது பெரு விபத்து ஏதேனும் ஏற்படம் முன் துரித நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர். .எனவே கழிவுநீர் மற்றும் வடிகால் வாரியம் கழிவுநீர் வெளியேருவதை சரிசெய்தும்,கழிவுநீர் வடிகால் உடைப்பு ஏற்பட்ட பள்ளத்தை துரித நடவடிக்கை எடுத்து சென்னை மாநகராட்சி சரிசெய்து தரும்படியும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் வேண்டுகோள்.
கருத்துகள் இல்லை