ராயபுரம் ஜி.ஏ ரோட்டில் காய்ச்சல் பரிசோதனை மற்றும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் துறை சார்பாக வார்டு 49 சென்னை ராயபுரம் ஜி.ஏ ரோட் ஆனந்த் அபார்ட்மென்ட் குடியிருப்பு வாசிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு பொதுமருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் ஆனந்த் அபார்ட்மெண்ட் குமியிருப்பு வாசிகள் 45வயதிற்க்கு மேற்பட்டோர் வருகைதந்து தடுப்பூசி போட்டுகொண்டனர். இந்த முகாமில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதுக்குட்பட்ட இணை நோய் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுகொண்டனர்.
முகாமுக்கு வருபவர்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டுவர வேண்டும் எனவும் பொதுமக்கள், முன்களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் இந்த முகாமில் கலந்து கொண்டு பயண்பெற்றனர்.
கருத்துகள் இல்லை