4 லட்சம் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு
அண்ணா பல்கலை கழக பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆன்லைன் தேர்வு ஏற்பட்ட குளறுபடியால் மாணவர்கள் தொடர்ந்து புகார்களை முன் வைத்தனர். இந்த புகாரை ஏற்று தமிழக முதல்வர் கல்வி அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து மாணவர்கள் நலன் கருதி அவர்களுக்கு தேர்வு நடத்த ஏற்பாடு செய்யலாம் என்று முடிவு செய்தனர். பின்னர் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்த போது மீண்டும் ஆன்லைன் தேர்வு நடைப்பெறும். மாணவர்களின் புகார்களை பரிசீலனை செய்து பின்னர் மாணவர்கள் விருப்பம் போல் ஆன்லைன் தேர்வு 3.00 மணி நேரம் நடைப்பெறும் என்றும், இந்த ஆன்லைன் தேர்வு எழுத மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை. கூடுதல் மதிப்பெண் வேண்டி தேர்ச்சி பெற்ற மாணவர்களும் இந்த ஆன்லைன் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதலாம். எந்த மதிப்பெண் அதிகமாக உள்ளதோ அந்த மதிப்பெண் வழங்கப்படும். இதனால் 4 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்
கருத்துகள் இல்லை