Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் சேஞ்ச் தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கினார்

    திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கெஜல்நாயக்கன்பட்டி மற்றும் கசிநாயக்கன்பட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஒரு பக்கம் மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் மாணவ-மாணவிகளிடம் தற்போது என்ன வகுப்பு படித்து வருகிறீர்கள் என்றும் பள்ளி படிப்பு முடித்த பின்பு அடுத்தது என்ன படிக்க விரும்புகிறீர்கள், எவ்வளவு மதிப்பெண் பெறுவீர்கள், எதிர்கால லட்சியம் என்ன என்றும் கேட்டறிந்தார். மாணவர்களின் படிப்பிற்காக தங்கள் அலுவலகம் எப்போதும் திறந்தே இருக்கும் என்று ஊக்கம் அளிக்கும் வகையில் பேசினார்.

    அப்போது மாணவர்கள் நாங்கள் படித்து முடித்த பின்பு மருத்துவர்கள், காவலர்கள், ராணுவ வீரர்கள், ஆசிரியர்கள், ஆட்சியாளர்களாக ஆவோம் என மாணவர்கள் தங்களின்  தனி கனவுகளை மாவட்ட கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர்.

    அந்த நிகழ்ச்சியில் சேஞ்ச்  தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் சரஸ்வதி மற்றும் ஒருங்கிணைப்பு நிறுவனர் பழனிவேல்சாமி  ஆசிரியர் சௌரிராஜன் ஹேப்ஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளர் உஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.


    செய்தியாளர் : நித்தியானந்தம் 


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad