Header Ads

  • சற்று முன்

    செட்டிநாடு ஸ்டைலில்பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல்


    செட்டிநாடு ஸ்டைலில் பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல் செய்தால், சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த இரண்டு காய்கறிகளுமே உடலுக்கு ஆரோக்கியமானவை என்பதால், அடிக்கடி இவற்றை உணவில் சேர்த்து வருவது நல்லது.

    உங்களுக்கு செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? 

    தேவையான பொருட்கள்: *

     காலிஃப்ளவர் - 1 * 

    பச்சை பீன்ஸ் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது) *

     கடுகு - 1 டீஸ்பூன் * 

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

     * கறிவேப்பிலை - சிறிது 

    * மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 

    * மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 

    * உப்பு - சுவைக்கேற்ப 

    * நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை:

     * முதலில் காய்கறிகளை சரியான அளவில் வெட்டிக் கொள்ள வேண்டும். * பின்னர் காலிஃப்ளவர் மற்றும் பீன்ஸ் இரண்டையும், கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து மென்மையாக வேகும் வரை வேக வைத்து இறக்கிக் கொண்டு, நீரை வடிகட்டிவிட வேண்டும்.

     * பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். * அடுத்து அதில் கறிவேப்பிலை, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் வேக வைத்துள்ள காய்கறிகளையும் சேர்த்து, உப்பு தூவி நன்கு பிரட்டி விட வேண்டும். 

    * காய்கறிகளானது மசாலாவுடன் நன்கு ஒன்று சேர்ந்ததும், ஒரு 2 நிமிடம் நன்கு கிளறி இறக்கினால், சுவையான செட்டிநாடு காலிஃப்ளவர் பீன்ஸ் பொரியல் தயார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad