Header Ads

  • சற்று முன்

    திரையுலகில் ஒரு மைல் கல் விவேக்

    சிறந்த நகைச்சுவை நடிகரும், திரையுலகம் மட்டுமல்லாது பொது மக்களின் நெஞ்சில் நிறைந்த நடிகரான விவேக் மாரடைப்பால் மரணம் சம்பவித்தது என்று காலை செய்தியை கேட்டவுடன் திரைத்துறை மட்டுமல்லாது ஒட்டுமொத்த சமூகமே ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது .

    ஜனநாயகத்தின் மீதும் சமூகத்தின் மீது மிகுந்த பற்றுள்ளவர். திரையுலகின் வாயிலாக சமுதாய சீர்திருத்தங்ககளை எளிய முறையில் சென்றடையும் வகையில் சிறப்பாக நடிப்பின் மூலம் வெளிப்படுத்தினார். பத்மஸ்ரீ என்கிற விருதும், சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவரின் முதல் படத்திலே இன்னைக்கு செத்தால் நாளைக்கு பால் என்கிற நகைச்சுவை நடிப்பை காட்டினார். ஒற்றை வசன நகை சுவையில் மக்களின்  மனதை பெற்றார் என்றால்  மிகையாகாது .

    இயற்கை சுற்று சூழல் பராமரிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதுவரை சுமார் 1கோடி மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பது நினைத்து பார்க்கும் போது வியப்பாகவுள்ளது.சமூக சிந்தனைகளை மக்கள் மனதில் எளிய முறையில் அனைவருக்கும் சென்றடையும் வகையில் நடிப்பு திறமையால் வெளிப்படுத்தியவர். ஆகவே தான் இவருக்கு சின்ன கலைவாணர் என்கிற பேரும் புகழும் பெற்றார். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad