• சற்று முன்

    மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

    உலக புகழ் பெற்ற விழாக்களில் ஒன்றான மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் சித்திரை திருவிழாவாகும்.  இந்த விழாவானது கொடியேற்றத்துடன் துவங்கி தினமொரு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் செய்து சாமி வீதி உலாவுடன் பட்டாபிஷகம் திருக்கல்யாணம் என 12 நாட்களும் விழாகோலம் காணப்படும்.

    இவ்விழா, கடந்த ஆண்டு கொரோனா தேசிய பேரிடரால் மக்கள் கலந்து கொள்ளாமல் கோயிலுக்குள் எளிமையான முறையில்  நடைபெற்றது. திருக்கல்யாணம் இணையதளம் வழியாக ஒளிபரப்பப்பட்டது.

    இந்த ஆண்டும் கோரோனா 2-வது அலை ஏற்பட்டுள்ளதால் சித்திரைத் திருவிழாவில் மக்கள் கலந்து கொள்ள அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும், குறிப்பிட்ட நேரம் மக்கள் கோயிலுக்குள் வந்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மக்கள் கோயிலுக்கு வந்து தரிசிக்கலாம். 10 வயதுக்குட்பட்டவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள் கோயிலுக்கு வரவும், பூஜைப்பொருள்களுடன் பக்தர்கள் வரவும் தடை செய்யப்பட்டுள்ளது. இதுபோல் சித்திரைத்திருவிழாவின் தொடர்ச்சியான கள்ளழகர் மதுரைக்கு வருகை தந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபவமும், வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் தடை செய்யப்பட்டுள்ளது. கள்ளழகர் கோயில் வளாகத்திலேயே அழகர் திருவிழா நடைபெறும்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad