• சற்று முன்

    தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு



    நான் இந்த மண்ணின் மைந்தன் என்னை எப்போதும் யாரும் அணுகலாம் - என கோவில்பட்டியில் அருகே அமைச்சர் கடம்பூர் ராஜு  பேச்சு :

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட கழுகுமலை பேரூராட்சி பகுதியில் இன்று வாக்கு சேகரிப்பு பணியில் அதிமுக வேட்பாளரும்  அமைச்சருமான கடம்பூர் ராஜூ தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

    கழுகுமலை பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கு சென்று தனது பத்தாண்டு கால சாதனைகளை துண்டு பிரசுரங்களாக பொதுமக்களுக்கு வழங்கி அதனை விளக்கி வாக்கு சேகரித்தார்.

    மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். அப்போது வந்த ஒரு மாற்றுத்திறனாளி தாங்கள் தான் தனது சொந்த நிதியிலிருந்து மூன்று சக்கர வாகனம் வாங்கி கொடுத்தீர்கள் உங்களுக்கு நன்றி என கூறினார் இதனால் அமைச்சர் நிகழ்ச்சி அடைந்தார். அங்கு மனிதர்கள் தொடர்ந்து வியாபாரிகளிடம் சென்று நேரடியாக சென்று வாக்கு சேகரித்தார் இதேபோல் பொதுமக்கள் மற்றும் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் என அனைவரிடம் சென்று துண்டுப்பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். பின்னர் பிரச்சாரத்தின் போது அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில் :

    நான் இந்த மண்ணின் மைந்தன் மற்ற வேட்பாளர்கள் பற்றி நான் பேசப் போவதில்லை என்னை எப்போது வேண்டுமானாலும் யாரும் அணுகலாம் ஆண்டு முழுக்க இதை தொகுதியிலேயே இருப்பவன் எந்த நேரத்தில் அழைத்தாலும் ஓடிவரும் தொண்டனாக இருப்பேன்  எந்த நேரத்தில் அழைத்தாலும் ஓடிவரும் தொண்டனாக பத்தாண்டுகள் செயல்பட்டிருக்கிறேன். இங்கு சமுதாயம் என்ற பேச்சுக்கே இடமில்லை தொகுதி வாழ் மக்கள் தான் என்று கூறுவேன் இங்கு ஒரு தாய் மக்களாக தான் வாழ்ந்து வருகிறோம் இணக்கமாக வாழ்ந்து வருகிறோம்.

    மத்தியில் டெல்லியில் எப்படி பாஜக ஆட்சி மலர்ந்தது அதேபோல் தமிழகத்தில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என ஆதரித்தது பாஜக தான். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்போது கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் அறிவிக்கப்படும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad