தேவர் திருமகனார் சிலையை கண்ணியமற்ற முறையில் போலீசார் அகற்றியதற்கு, கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒரு சிலர் ஆர்வ மிகுதியின் காரணமாகவோ, விதிமுறைகள் பற்றி அறியாமலோ உரிய அனுமதியின்றி தேவர் பெருமகனாரின் சிலைகளை நிறுவி விட்டால், காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்களுக்கு சட்ட நடைமுறைகளை எடுத்துச் சொல்லி, கண்ணியமான முறையில் அந்த சிலைகளை தற்காலிகமாக அகற்றி, உரிய அனுமதிகளுக்குப் பிறகு நிரந்தரமாக அவை நிறுவப்பட வழிவகை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ள திரு. டிடிவி தினகரன், அப்படிச் செய்யாமல், இரவோடு இரவாக ஊருக்குள் புகுந்து, சம்பந்தப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தைக் கூட நடத்தாமல், அனுமதியின்றி நிறுவப்பட்ட சிலை என்றாலும் கூட, புல்டோசர் கொண்டு அச்சிலைகளை அகற்றுவதை எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
அரசின் பின்னணியில் காவல்துறையினர் செய்யும் கண்ணியமற்ற இந்தச் செயல், அந்தத் தலைவருக்கு அவமரியாதை செய்வது மட்டுமல்ல - அரசின் அதிகார, ஆணவப்போக்கை காட்டுவதாகவும் இருக்கிறது - இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் சம்பந்தப்பட்ட மக்களும், காவல்துறையும் கவனமாக இருக்க வேண்டும் என திரு. டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை