திருப்பத்தூரில் ஸ்ரீபிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக விழா! திரளான பக்தர்கள் பங்கேற்பு!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஜெயாபுரத்தில் ஸ்ரீபிரசன்ன நூதன ஜீர்ணோத்தாரண வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவிற்கு தலைவர் ஆனந்தன் மற்றும் திருப்பத்தூர் வழக்கறிஞர் மன்ற தலைவர் ரமேஷ் முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் விடியற்காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மங்கல இசை, அக்னி பிரதிஷ்டை, முதல் கால ஹோமம், தீர்த்த பிரசாத வினியோகம், கும்ப ஆராதனம், இரண்டாம் கால ஹோமம், மூன்றாம் கால ஹோமம், மகா பூர்ணஹூதி, கும்பயாத்ரா தானம், கும்பம் புறப்பாடு, தீர்த்த பிரசாத விநியோகம், அன்னதானம், திருக்கல்யாண உற்சவம், ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக பிக்பாஸ் புகழ்பெற்ற ஆர்த்தி மற்றும் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். பால்குடம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின் புனித நீர் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது இதில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் பெருமாளை வழிபட்டனர் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் அருள் பெற்றனர்.
கருத்துகள் இல்லை