Header Ads

  • சற்று முன்

    அ.தி.மு.க.கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்குமா ? அல்லது புஸ்வானமா ?

     

    அ.தி.மு.க. தேர்தல் கூட்டணியில்  தேமுதிக தொங்களில் விடப்பட்டுள்ளதாக  அ.தி.மு.க. கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.. 2011ல் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.  41 தொகுதிகள் அசுர வெற்றி பெற்று அதிமுகவின் எதிர் கட்சியாக விளங்கியது. பின்னர் 2016 -ல் கூட்டணியிலிருந்து விலகி மூன்றாவது அணியை அமைத்து தோல்வியை சந்தித்தது. மீண்டும் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன்  கூட்டணி பேச்சு வார்த்தை பழைய பொற்காலத்தை நினைவிற்கொண்டு 41 தொகுதிகளை கேட்கிறது. தற்போது வாழ்வா சாவா என்ற நிலைப்பாட்டில் அதிமுக இருக்கும் சூழலில் அதிக தொகுதிகளில் அதிமுக போட்டியிட நினைகிறது. ஆகவே தொகுதி பங்கீட்டில இழுபறி நீடித்து வருகிறது. எனவே பா.ம.கவிற்கு 23 தொகுதிகள் வழங்கியுள்ளது. இந்நிலையில் தே.மு.தி.க.விற்கு 15 தொகுதிகள் என்ற நிலைப்பாட்டில் அதிமுக பேச்சுவார்த்தை துவங்கியது. இதற்கு உடன்பாடு இல்லாத தேமுதிக பா.ம.க விற்கு கொடுத்த தொகுதிகளை விட அதிக எண்ணிக்கை வழங்க வேண்டுமென கூறப்படுகிறது .குறைந்தது   30 தொகுதிக்கு மேல் வழங்க வேண்டுமென பேச்சு வார்த்தை  நடத்தி வருகிறது.

    மூன்று கட்ட பேச்சு வார்த்தையில் முடிவு எட்டாத நிலையில் ஒருவேளை திமுக. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிவிட்டால் தேமுதிக-வுக்கு 20 முதல் 25 தொகுதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, காங்கிரஸுக்கு இடங்கள் உறுதியாகும் வரை, தேமுதிக - எடப்பாடி அணி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாகவே இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

    இதற்கிடையில் பாமக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பாமக, அதிமுக, மற்றும் பிஜேபி சின்னம் மட்டும்  அச்சிடப்பட்டுள்ளது. இந்த வெளியிட்டால் தேமுதிக கூட்டணியில் இருக்கிறதா என்கிற சந்தேகம்  எழுந்துள்ளது.   

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad