• சற்று முன்

    பொழிச்சலூரில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு பிரச்சார குழுவினர் கிரகம் எடுத்து பொதுமக்களுக்கு வாக்காளர் பரப்புரை விழிப்புணர்வு பிரச்சாரம்

    பொழிச்சலூரில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு பிரச்சார குழுவினர் கிரகம் எடுத்து பொதுமக்களுக்கு வாக்காளர் பரப்புரை விழிப்புணர்வு பிரச்சாரம்


    சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஊராட்சி அலுவலகம் அருகே செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆணைப்படி வருகின்ற சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு  கிரகம் எடுத்து பொதுமக்களுக்கு வாக்களர் பரப்புரை விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சார குழுவினர்  பிரச்சாரத்தின் போது அனைவரும் வாக்களிக்க வேண்டும், வாக்களிக்க செல்லும் மக்கள் ஆழ்ந்து சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும் ஓட்டு அளிப்பாவர்கள் இனாம் வாங்கி வாக்களிக்க கூடாது, உண்மையாக மனசாட்சிக்கு பயந்து வாக்களிக்க வேண்டும் என்றும் ஊருக்கு பயன் அளிப்பவர்களை தேர்ந்தெடுத்து வாக்களிக்க வேண்டும், ஒருவர் வாக்களிக்க செல்லும் முன்னதாக  வாக்களிக்கபட வேண்டிய ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும். வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக கடமை ஏதேனும் ஒரு காரணம் காட்டி வாக்களிப்பதை தவிர்த்தல் கூடாது எனவும் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும், வயதானவர்கள் வாக்களிக்க உதவிட வேண்டும், வாக்களிப்பது ஒவ்வொருவரின் உரிமையும், கடமையாகும் என இவ்வாறு பிரச்சார குழுவினர் கிரகம் எடுத்தும் ஆடல், பாடலுடன் பொதுமக்களுக்கு வாக்களர் பரப்புரை விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

    இதன் வீடியோ பதிவை nms today youtube சேனலில் காணலாம் 

    பல்லாவரம் தொகுதி செய்தியாளர் ராஜ்கமல்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad