கோவில்பட்டி, கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கல்வித்தந்தை திரு.கே.ராமசாமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவு
கோவில்பட்டி, கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கல்வித்தந்தை திரு.கே.ராமசாமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவு சொற்பொழிவு, கல்வி உதவித்தொகை திட்டம் துவக்கம் மற்றும் இணையவழி வானொலி துவக்கம் நடைபெற்றது.
கே.ஆர். குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு.கே.ஆர்அருணாச்சலம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செல்வி.எ.ஷண்மதி மற்றும் செல்வன்.எ.நிதிஷ் ராம், ஆகியோர் தலைமை தாங்கினர். நேஷனல் பொறியியல் கல்லூரியின் இயந்திரப்பொறியியல் துறைத்தலைவர் முனைவர் கே.மணிசேகர் வரவேற்புரை வழங்கினார். மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை நான்காம் ஆண்டு மாணவி செல்வி.எல்.நிஷாந்தி, நிறுவனர், கல்வித்தந்தை திரு.கே.ராமசாமி அவர்களைப் பற்றி கவிதை வாசித்தார்.
கல்லூரியின் பேராசிரியர் மற்றும் டீன் (ஆர் & டி) முனைவர் எம்.ஏ.நீலகண்டன் நிறுவனர் கல்வித்தந்தை திரு.கே.ராமசாமி நினைவு கல்வி உதவித்தொகை திட்டத்தை பற்றி எடுத்துரைத்தார். நேஷனல் பொறியியல் கல்லூரியில், இளநிலை பொறியியல் பட்டபடிப்புகளில் பயில விரும்பும் தமிழ்நாடு அரசு பொறியியல் கலந்தாய்வில் 200 க்கு 190 மேல் மதிப்பெண் பெறுபவர்களுக்கு 100 சதவீத கல்லூரி கல்வி கட்டணமும், மேலும் இதில் பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கு கல்லூரி விடுதி அல்லது பேருந்து கட்டண உதவித்தொகையும், 200 க்கு 180 மேல் மதிப்பெண் பெறுபவர்களுக்கு 100 சதவீத கல்வி கட்டணமும், விளையாட்டில் தேசிய அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு 50 சதவீத கல்வி கட்டணமும், 100 சதவீத கல்லூரி விடுதி அல்லது பேருந்து கட்டண உதவித் தொகையும், மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு 100 சதவீத கல்லூரி விடுதி அல்லது பேருந்து கட்டண உதவித் தொகையும், மொத்தம் 34 இளநிலை பொறியியல் மாணவ மாணவிகளுக்கும், முதுநிலை பொறியியல் பட்டபடிப்புகளில் பயில விரும்பும் தகுதியுள்ள மாணவர்களுக்கு 80 சதவீத கல்வி உதவித்தொகை கட்டணமும், முழுநேர (பி.எச்.டி.) ஆராய்ச்சி படிப்பு பயில விரும்புபவர்களுக்கு ரூபாய் 10,000 மாதாந்திர உதவித்தொகையும் வரும் கல்வி ஆண்டு முதல் வழங்கப்படுகிறது என்று விவரித்தார்.
வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் சோ.தாமரைச்செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிறுவனர் கல்வித்தந்தை திரு.கே.ராமசாமி நினைவு கல்வி உதவித்தொகை திட்டத்தையும், வாய்ஸ் ஆப் என்இசி - "இணையத்தோடு இணைவோம்" என்ற இணையவழி வானொலியையும், துவக்கிவைத்து “கல்விமுறை 5.0" என்ற தலைப்பில் 2ம் ஆண்டு நினைவு சொற்பொழிவு நிகழ்த்தினார்.
அவர் தமது உரையில், தனது கடின உழைப்பால் முன்னேறி தன் மண்ணைய்ச்சார்ந்த மாணவர்களுக்கு காலத்தால் அழியாத கல்விச்செல்வத்தை வழங்கியுள்ள திரு.கே.ஆர்.ராமசாமி அவர்களுக்கு நன்றியையும், தற்போதைய பாகுபாடற்ற கல்விமுறை 5.0 பற்றி தெளிவாகவும், கலாம் கூற்றின்படி வாய்ப்புக்காக காத்திருக்காதே, உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள் என்றும், மாணவர்கள் அனைவரும் சொல், செயல், எண்ணம் ஆகியவற்றில் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று எளிய தமிழில் வழியுறுத்தினார். லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் எ.ராஜேஸ்வரன் நன்றி உரையாற்றினார். இவ்விழா கல்லூரி இணையதளம் www.nec.edu.in மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் நேஷனல் பொறியியல் கல்லூரியின் அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள், கே.ஆர்.குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள், மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கே.ஆர். குழுமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர், துணைத்தலைவர், தாளாளர், இயக்குனர், மற்றும் முதல்வர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி கல்லூரியின் இணைப் பேராசிரியர் முனைவர் என்.பி.பிரகாஷ், நூலகர் முனைவர் கே.கருணை ராகவன் மற்றும் ஆசிரிய உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை