Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூரில் மகளிர் திட்ட இயக்குனர் துண்டறிக்கை வழங்கி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

    திருப்பத்தூரில் தேர்தல் விழிப்புணர்வு 100 சதவீதம் வாக்களிப்பதை குறித்து  மகளிர் திட்ட இயக்குனர் துண்டறிக்கை  வழங்கி விழிப்புணர்வுப் ஏற்படுத்தினர்

    திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் பூகடை பஜார் கடைத்தெரு பிரதான வாணியம்பாடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல்  விழிப்புணர்வு குறித்து வாகனங்களிலும்  பேருந்துகளிலும்  விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி மகளிர்  திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி தலைமையில் நடக்க இருக்கும்   சட்டமன்ற  தேர்தலலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. அப்பொழுது உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம். தவறாமல் வாக்களிப்பீர் வாக்களிப்பது பொறுப்புள்ள குடிமகனின் அடையாளம் நமது இலக்கு 100 சதவீத வாக்குப்பதிவு வாக்களிப்பதில் பெருமை கொள்வோம். இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம் போன்ற வாசகங்களை துண்டுப் பிரசுரங்கள் மூலம் பொது மக்களுக்கும் அப்பகுதியை சுற்றியுள்ள கடைகளுக்கும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கும் விநியோகித்து பிரச்சாரம் செய்யப்பட்டது.

    இந்தப் பிரச்சார கூட்டத்தில் போக்குவரத்து ஆய்வாளர் காளியப்பன் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் அரசு அலுவலர்கள் மகளிர் திட்ட குழு பெண்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad