கோவில்பட்டி அருகே ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் மாணவ மாணவியர்கள் 22 ஆண்டுகளுக்கு பிறகு சங்கமம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வானரமுட்டி ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் 1997ஆம் ஆண்டு முதல் 99ஆம் ஆண்டு வரை ஆசிரியர் கல்வி படித்த மாணவ மாணவியர்கள் 22 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி இன்று வானரமுட்டி ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர் பெருமக்களுக்கு பழைய மாணவ மாணவியர்கள் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவித்தனர். கடந்தகால நினைவுகளையும் நிகழ்கால சந்திப்புகளையும் ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தி நலம் விசாரித்து அன்பை பரிமாறிக்கொண்டனர்.பின்னர் அனைவரும் தங்களது ஆசிரியர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
1997 99 காலகட்டத்தில் கல்வி பயின்ற அனைவருமே கல்வித்துறையிலும் பல்வேறு அரசுத் துறைகளிலும் உயர்ந்திருப்பதை ஒவ்வொருவரும் தங்களது நட்புகளுடன் பேசி பரிமாறி தங்களது குடும்ப உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி வைத்தனர். விழா ஏற்பாடுகளை பழைய மாணவர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மகேந்திர பாபு, குணசேகரன், ரமேஷ் குமார், கலைச்செல்வி, ஜோதிலட்சுமி, கண்ணகி, கருப்பசாமி, கவிதா, முருகப் பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை