தேவிபட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 2 ஏக்கரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விளைச்சலா?
தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் தேவிப்பட்டினத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அதன் எதிர்ப்புறம் சுமார் 2 ஏக்கர் அளவில் பிளாஸ்டிக் பைகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன அதை பார்ப்பதற்கு வயலில் விளைவித்து இருப்பதுபோல் காட்சியளிக்கிறது. தமிழக பிளாஸ்டிக்கு தடை செய்யப்பட்ட நிலையில் இந்த இடத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பிளாஸ்டிக் பைகள் ஆகவே தெரிகிறது. ராமநாதபுரத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் உள்பட சுகாதாரத்துறை அதிகாரிகள் இவ்வழியாக தான் அனைத்து ஊர்களுக்கும் வரவேண்டும் அப்படி வரும்பொழுது இதை பார்க்காமல் வந்திருக்க வாய்ப்பே இல்லை அப்படி இருந்தும் இதை கண்டு கொள்ளாமல் இந்த அதிகாரிகள் இருப்பது வேதனை அளிப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இனியாவது இதை அகற்றி நடவடிக்கை எடுப்பார்களா என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
குப்பைகளால் சுகாதார கேடு மாவட்ட ஆட்சியரும் கண்டுகொள்ளாதது ஏன் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள சுற்றுலா பயணிகள் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை ஓரம் குப்பை கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்படுவதோடு அப்பகுதி முழுவதும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பரந்து பரவி கிடக்கிறது .
ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் தேவிப்பட்டினத்தில் இருந்து 3 கிலோ மீட்டரில் சாலையோரம் குப்பை கொட்டப்பட்டு கிடக்கிறது இந்த குப்பையால் இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கின்றனர் இங்கு சாலையோரம் குப்பைமேடு உருவாக்கி துர்நாற்றம் வீசுகிறது இதிலிருந்து பறக்கும் பிளாஸ்டிக் பைகள் சுமார் 2 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பரந்து கிடக்கின்றன இவற்றால் நிலத்தடி நீர் பாதிப்பதோடு கால்நடைகள் இவற்றை உண்பதால் பாதிப்பு ஏற்படுகிறது டெய்லி ஊராட்சி நிர்வாகம் இங்கு குப்பைகளை கொட்டுவதை நடவடிக்கை எடுக்க வேண்டும் தேவிபட்டினம் ஊராட்சி இங்கு குப்பைகளை கொட்டி அதை தரம் பிரிக்காமல் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்காமல் அப்படியே கொட்டி அதை வைத்துக் கொள்கின்றனர் இதனால் அணையாமல் டீ கடந்த 15 நாட்களுக்கு மேலாக புகைந்து வருவதாக அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கூறுகின்றனர் சுகாதார கேடு ஏற்படுத்தும் தேவிபட்டினம் ஊராட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் மாவட்ட ஆட்சியர் ராமநாதபுரத்திலிருந்து திருவாடானை ஊராட்சி மற்றும் காரங்காடு சுற்றுலா தளம் திருவொற்றியூர் சுற்றுலாத்தலம் அரசு அலுவலக பணிகளுக்கு இவ்வாறுதான் வருகிறார் அவர் இதை கண்டுகொள்ளாமல் வருவது மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவிக்கின்றனர் அரசு அதிகாரிகள் தங்களது கடமைகளை செய்யாமல் இருந்தால் இதுபோன்ற ஊராட்சிகள் எப்படி தெரிந்தும் என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது
கருத்துகள் இல்லை