சாலையில் சிக்கி ரோட்டில் கிடந்த முதியவரை காப்பாற்றிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்
திருக்கோஷ்டியூர் அருகே பைக்குடிப்பட்டி என்ற இடத்தில் சாலையில் சிக்கி ரோட்டில் கிடந்த முதியவரை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி செய்து அவரை காப்பாற்றிய சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கலந்துகொண்டார் பின்னர் சிவகங்கையில் தமிழக முதல்வர் பங்கேற்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் நடைபெறும் நிகழ்ச்சிக்காக அதுகுறித்த முன்னேற்பாடு பற்றி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து திருச்சி விமான நிலையம் செல்லும் வழியில் திருக்கோஷ்டியூர் அருகே பைக்குடிபட்டி என்ற இடத்தில் வரும்போது ரோட்டில் சைக்கிளில் சென்ற முதியவர் அடிபட்டு கீழே கிடந்து உள்ளார் இதனை பார்த்த சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் உடனடியாக தன்னுடைய வாகனத்தை நிறுத்தி விட்டு ஓடி சென்று அந்த முதியவருக்கு உதவி செய்தார் முகத்தில் தண்ணீர் தெளித்து தன்னுடைய கைக்குட்டையால் முதியவரின் முகத்தை துடைத்து தன்னுடைய உதவியாளர்களை உடனடியாக அழைத்து திருப்பத்தூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே தெரியவந்தது சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் அமைச்சரின் செயலை கண்டு மிக மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் அமைச்சருக்கு நன்றியை தெரிவித்தனர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த முதியவர் தற்போது நலமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
கருத்துகள் இல்லை