அடிப்படை வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகி வரும் பொதுமக்கள் திருநீர்மலை பேரூராட்சியின் அவலநிலை
சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே சாலை வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகி வரும் பொதுமக்கள் திருநீர்மலை பேரூராட்சியின் அவலநிலை
செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பேரூராட்சிக்குட்பட்ட 13-ஆவது வார்டு இரட்டைமலை சீனிவாசன் தெருவில் சாலைகள் குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது இச்சாலையில் கனரக வாகனங்கள் அதிக அளவில் இச்சாலையில் செல்வதால் அதிக விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே இப்பகுதியில் சாலை வசதியே இல்லாமல் இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.இப்பகுதியில் சுமார் 600குடும்பங்களுக்கு மேற்பட்டோர் இப்பகுதியில் வசித்து வருகின்றனர் .இப்பகுதி மக்களுக்கு இதுவரை முறையான சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் இதுகுறித்து திருநீர்மலை பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாற்றி வருகின்றனர்.எனவே செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு இப்பகுதிக்கு சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை