டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் பாரதிய ஜனதா கட்சியினர் கொடி கம்பம் நடுவதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் பரபரப்பு
அனகாபுத்தூரில் டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் பாரதிய ஜனதா கட்சியினர் கொடி கம்பம் நடுவதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் பரபரப்பு
செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் காமராஜர் சாலை அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் அதே பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியைய் சேர்ந்த சிலர் கட்சியின் கொடி கம்பம் நடுவதற்க்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கொள்கைக்கு எதிரான பாரதிய ஜனதா கட்சியின் கொடியை எங்கள் பகுதியில் நட விட மாட்டோம் என்று எதிர்ப்பு தெரிவித்து அனகாபுத்தூர் பகுதியைய் சேர்ந்த சமூக ஆர்வலர் தமிழ்வாணன் அவர்களின் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.உடனே சம்பவ இடத்திற்கு வந்த சங்கர் நகர் காவல் நிலைய அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
கருத்துகள் இல்லை