கோவில்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் காஷ்மீர் லடாக் பகுதியில் விபத்தில் பலி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி வயது 32 இவருக்கு திருமணமாகி தமயந்தி என்ற மனைவியும், கன்னிகா வயது 7, வைஷ்ணவி வயது 4, பிரதீப் குமார் வயசு 1 ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
ராணுவத்தில் நாயக் பொறுப்பில் பணியாற்றி வந்த கருப்பசாமி காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில் பணியிலிருந்த போது நேற்று நள்ளிரவு அப்பகுதியில் பனி மலையில் நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்திற்கு ராணுவ அதிகாரிகள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கருப்பசாமியின் குடும்பத்தினர் மற்றும் திட்டங்குளம் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் உடல் நாளை அல்லது நாளை மறுதினம் அவரது சொந்த ஊரான கோவில்பட்டி அருகே திட்டங்குளம் கிராமத்துக் கு கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.
கருத்துகள் இல்லை