Header Ads

  • சற்று முன்

    ஈரோடு :அமைச்சர் கருப்பண்ணன் பாரத பிரதமரின் "ஆவாஸ் யோஜனா" திட்டம்" அனைவருக்கும் வீடு" என்கிற திட்டத்தை பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தினார்.

    ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியில் அமைச்சர் கருப்பண்ணன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதில் ஒரு பகுதியாக பாரத பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டமான அனைவருக்கும் வீடு என்கிற திட்டத்தினை பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் மற்றும் வீடில்லாத அனைவருக்கும் இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறினார் .

    மேலும் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டை தமிழக அரசு ஒரு லட்ச  ரூபாய்க்கு வழங்கும் எனவும் மீதித் தொகையை தமிழக அரசு மானியமாக பொதுமக்களுக்கு கிடைக்கும் என்றும் கூறினார். இத்திட்டத்தில் சேர நகராட்சி பேரூராட்சியில் உள்ள அனைவரும் கிராம நிர்வாக அலுவலரிடம் தங்களது முழு விபரத்தையும் சமர்ப்பித்தால் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் அதை சரிபார்த்து உரிய  ஆவணங்கள் உள்ளவர்களுக்கு இத்திட்டத்தினை கிடைக்க வழிவகை செய்வார்கள் என்றும் அமைச்சர் கருப்பணன் கூறினார். இவ்விழாவில் பவானி நகரச் செயலாளர் கிருஷ்ணராஜ், அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் சரவணகுமார், சிலம்பரசன், ஆகியோர்களும் பவானி நகர பொதுமக்களும் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்.

    எமது செய்தியாளர் யோகேஸ்வரி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad