Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு

     


    தூத்துக்குடியில் இருந்து விருதுநகர் மாவட்டத்திற்கு ஆய்வுக்கு சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவில்பட்டியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கொரோனா தடுப்புப் பணிகள் ஆய்வு கூட்டம், வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு மற்றும் புதிய திட்டபணிகள் தொடக்க விழா தூத்துக்குடியில் நடைபெற்றது.இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதன் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் இருந்து விருதுநகருக்குச் சென்றார்.


    விருதுநகருக்குச் செல்லும் வழியில், கோவில்பட்டி தொழிற்பேட்டை எதிரே தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு 18சதவீத ஜி.எஸ்.டி வரியை 12 சதவீதமாக குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டதற்கும், கொரோனா ஊரடங்கு காலத்தில் தீப்பெட்டி தொழிலாளர்களின் நலன் கருதி ரூ 2ஆயிரம் நிவாரண தொகை வழங்கியதற்கு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் நினைவு பரிசு வழங்கினர்.இதில், நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பரமசிவம், துணைத் தலைவர் கோபால்சாமி, செயலாளர் சேதுரத்தினம், பொருளாளர் தங்கமணி, தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க நிறுவனர் ராஜவேல், தலைவர் ஆர்.எஸ்.சுரேஷ், துணைத் தலைவர் ராஜு, பொருளாளர் செல்வமோகன், தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க இணைச் செயலர் வரதராஜன் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளித்தனர். 



    இதனை தொடர்ந்து கோவில்பட்டி எம்.எல்.ஏ.அலுவலகம் முன்பு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தலைமையில், மாவட்ட ஊராட்சிக் குழத் தலைவர் சத்யா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் தங்கமாரியம்மாள், சந்திரசேகர், பிரியா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், துணைத் தலைவர் பழனிசாமி, கழகப் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர் சுப்புராஜ், பொதுக் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வழக்குரைஞர் ரத்தினராஜா, மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் காளிதாஸ் அய்யன்ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலர் செல்வகுமார், பொருளாளர் வேலுமணி, மகளிரணியைச் சேர்ந்த ஜெயா வேலுமணி, வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலர் லட்சுமணப்பெருமாள், அதிமுக ஒன்றியச் செயலர்கள் வினோபாஜி (கயத்தாறு மேற்கு), அன்புராஜ் (கோவில்பட்டி கிழக்கு), இனாம்மணியாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் மகேஸ்குமார், கோவில்பட்டி பால்சொசைட்டி தலைவர் தாமோதரன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் முகேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, சங்கரலிங்கபுரம் பகுதியில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் பெருமாள் தலைமையில வரவேற்பு அளிக்கப்பட்டது. இதே போன்று வேலாயுதபுரம் விலக்கு பகுதியிலும் தமிழக முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தெற்கு திட்டங்குளம் முதல் தூத்துக்குடி மாவட்ட எல்கையான தோட்டிலோவன்பட்டி விலக்கு வரை சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad