Header Ads

  • சற்று முன்

    ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் பாத யாத்திரைக்கு தடை விதித்ததை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில்  பாரதிய ஜனதா கட்சியினர் பாத யாத்திரைக்கு தடை விதித்ததை நீக்கக் கோரி சுமார் 800-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பாரதிய ஜனதா கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் விஜயன்  தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


    மாநில தலைவர் முருகன் திருத்தணியில் உள்ள L.முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்வதாக  அறிவித்த  வெற்றிவேல் பாத யாத்திரைக்கு அரசு தடை விதித்திருந்தது. தடையை மீறி மாநில தலைவர் L.முருகன்  திருத்தணியில் பாதை யாத்திரை மேற்கொண்ட பட்சத்தில் மாநில தலைவர் முருகனை கைது செய்யும் சூழல் உருவானது இதனால்    பாரதிய ஜனதாவின் பாத யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தடை விதித்ததை எதிர்க்கும் பொருட்டாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி 800-க்கும் மேற்பட்ட பாஜகவினர்  முற்றுகையில் ஈடுபட்டனர்.

    தமிழகம் முழுவதும்   பாரதிய ஜனதாவினர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாரதிய ஜனதாவினரையும் கைது செய்ய ராணிப்பேட்டை நகர காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா   உத்தரவின் பேரில் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத  முன்னெச்சரிக்கையாக 100-க்கும் மேற்பட்ட போலீசாருடன்  தயார் நிலையில் இருந்தனர். பின்பு அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர்.

    இந்த  ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்  விஜயன் மாவட்ட பார்வையாளர் ரவிச்சந்திரன் வர்த்தகப் பிரிவு மாவட்ட தலைவர் முருகன் மாவட்ட இளைஞரணி தலைவர் சரத்குமார் மாவட்ட இளைஞரணி செயலாளர் சதீஷ்குமார் காந்தி, சுரேஷ், விவசாய அணி தலைவர் ஸ்ரீநாத், பொதுச் செயலாளர் வெங்கடேசன், சிணிவாசன், சின்னி பிரசன்னா,  முனுசாமி ரெட்டி மற்றும்  நகர கிளை நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணியினர் அமைப்புசரா  நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad