MGR நூற்றாண்டிற்கு 100 ரூபாய் நாணயம் வெளியீடு
MGR நூற்றாண்டிற்கு 100 ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது நாணயவியல் சேகரிப்பாளரும், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனரும் தலைவருமான யோகா ஆசிரியர் விஜயகுமார் எம்ஜிஆர் நினைவார்த்த நாணயம் குறித்து பேசுகையில், பாரத ரத்னா விருது பெற்றவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மறைந்த எம்.ஜி.ராமச்சந்திரனின் பிறந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்திய அரசு ரூ .100 மற்றும் ரூ .5 நாணயங்களை வெளியிட்டுள்ளது.
நாணயத்தில் எம்ஜிஆர் உருவப்படத்துடன் எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்த நூற்றாண்டு என ஆங்கிலத்திலும் மேல் சுற்றளவில் தேவ்நாகரி எழுத்திலும் உள்ளது. '1917-2017' ஆண்டு டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரனின் உருவப்படத்திற்கு கீழே அச்சிடப்பட்டுள்ளது.
நாணய முன்பக்கத்தில் அசோக தூணின் சிங்க லட்சினையுடன் 'சத்யமேவ் ஜெயதே' என அச்சிடப்பட்டுள்ளது. ரூ .100 நாணயம் 35 கிராம் மற்றும் 5 ரூபாய் 6 கிராம் எடையைக் கொண்டுள்ளது. ரூ .100 நாணயம் வெள்ளி (50 சதவீதம்), தாமிரம் (40 சதவீதம்), நிக்கல் (5 சதவீதம்), துத்தநாகம் (5 சதவீதம்) ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ .5 நாணயம் தாமிரம் (75 சதவீதம்), துத்தநாகம் (20சதவீதம்), நிக்கல் (5 சதவீதம்) ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்' என்று பிரபலமாக அறியப்பட்ட ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அதிமுக) கட்சியின் நிறுவனர் ஆவார் .
திரைப்பட நடிகரும், மூன்று முறை முதல்வருமான இவருக்கு 1988 ஆம் ஆண்டில் பாரத ரத்னா வழங்கப்பட்டது . எம்ஜிஆர் நூற்றாண்டுக்கு வெளியிடப்பட்ட நூறு ரூபாய் நாணயம் புழக்கத்தில் விடப்படாத அதாவது பொதுப் பயன்பாட்டு புழக்கத்திற்கு விடப்படாத நினைவார்த்த நாணயம் ஆகும் என்றார்.
கருத்துகள் இல்லை