திருவாடானையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பண்ணவயலில் புதிய தமிழகம் மற்றும் கிராம மக்கள் இணைந்து புதிய தமிழகம் மாவட்டவர்த்தக பிரிவு செயலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் கிராமத்தலைவர் பாண்டியராஜன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறாரகள இதில் பள்ளன், குடும்பன், காலாடி, பண்ணாடி, மூப்பன், தேவேந்திர குளத்தான், வாதிரியார் 7 உட்பிரிவு இனத்தை சேர்ந்தவர்களை பட்டியல் இனத்தில் இருந்து நீக்கி அனைவரையும் தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடக் கோரி தொடர்ந்து கருப்புச்சட்டை அணிந்து 300க்கும் மேற்பட்ட நாட்களை கடந்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இன்று அதனை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். போலிஸ் பாதுகாப்புடன அமைதியான முறையில் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை