• சற்று முன்

    சோளிங்கர் திருமதி எத்திராஜம்மாள் முதலியாண்டார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை மாவட்ட ஆட்சித் தலைவர் திவ்யதரிஷிணி IAS ஆய்வு

    சோளிங்கர் மாதிரி பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட திருமதி எத்திராஜம்மாள் முதலியாண்டார் அரசு மகளிர்  மேல்நிலைப்பள்ளியை மாவட்ட ஆட்சித் தலைவர் திவ்யதரிஷிணி IAS ஆய்வு !!!!

    சோளிங்கரில் உள்ள திருமதி ராஜம்மாள் முதலியாண்டார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 2020 21ம் கல்வியாண்டில் மாதிரி பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    இந்தப் பள்ளி மாதிரி பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதால் இந்த பள்ளியில் கட்டிட வசதி, நூலக வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.

    மேலும் இந்த பள்ளியை மேம்படுத்த என்னென்ன அடிப்படை தேவைகளும் ,  வசதிகளும் வேண்டும் என்று பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு )மூர்த்தி அவரிடம் கேட்டறிந்தார்கள் .

    இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் ,மாவட்ட கல்வி அலுவலர் அருளரசு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோபிகிருஷ்ணன், ராஜா, சோளிங்கர் வட்டாட்சியர் ரேவதி ,பேரூராட்சி செயல் அலுவலர் செண்பகராஜன், வருவாய் ஆய்வாளர் யுவராஜ் ,பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் வடிவேல் , கிராம நிர்வாக அலுவலர் சானு மற்றும் ஆசிரியர்கள் அதிகாரிகள் உடன்  இருந்தார்கள்.. 

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad