• சற்று முன்

    காவேரிப்பாக்கம் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலிசார் விசாரணை

    காவேரிப்பாக்கத்தை அடுத்த தச்சம்பட்டறை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் அரி (வயது 45), விவசாயி. இவரது மனைவி காமாட்சி (40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அரி, காமாட்சி ஆகிய இருவரும் தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் கணவன் மனைவி இடையே  தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் விரக்தி அடைந்த காமாட்சி வீட்டில் விவசாய நிலத்திற்கு வாங்கி வைத்திருந்த பூச்சிமருந்தை குடித்துவிட்டார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். அங்கு  சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad