• சற்று முன்

    வில்லிவாக்கத்தில் வழக்கறிஞர் ராஜேஷ்யை அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி கொலை


    சென்னை வில்லிவாக்கத்தில்  வழக்கறிஞர் ஒருவரை 8 பேர் கொண்ட ஓட ஓட விரட்டிவெட்டி படுகொலை செய்தது,. சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ்(45) இவர் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆக இருந்தார். இவர் சென்னை பெரம்பூர் படேல் சாலை யில் அலுவலகம் வைத்திருந்தார். இவர் நேற்று வில்லிவாக்கம் மோகன் ரெட்டி மருத்துவமனையின் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த 8 பேர் கொண்ட கும்பல் வழக்கறிஞர் ராஜேஷ் என்பவரை வழி மடக்கி சரமாரியாக கத்தியால் வெட்டினர். அப்போது வலி தாங்க முடியமால் ஒட முயற்சித்த போது அந்த கும்பல் ஓட ஓட விரட்டி சென்று வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றது. இதை நேரில் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஒட்டம் பிடித்தனர். உடனே வில்லிவாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அண்ணா நகர் துணை ஆணையர் ஜவகர் மற்றும் போலீசார் பலத்த ரத்த காயத்துடன் கிழே கிடந்த ராஜேஷை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் வரும் வழியில் இறந்து விட்டதாக கூறினார். இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து முதல் கட்ட விசாரணையில் பல ஆண்டுகளுக்கு முன்பு வழக்கறிஞர் ரஜினி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் என கூறப்படுகிறது. மேலும் இவரை வெட்டிய கும்பலை பிடிக்க அண்ணா நகர் துணை ஆணையர் ஜவகர் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர். வழக்கறிஞர் ராஜேஷ் மக்கள் ஆளும் அரசியல் கட்சியின் மாநில தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad