திருப்பத்தூரில் ஐபிஎஸ் அதிகாரிகளின் மனைவிகள் சங்கம் சார்பில் ஆதரவற்றோருக்கு நலத்திட்டம் உதவிகளை ப்ரியம்வதே வழங்கினார்.
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளின் மனைவிகள் கூட்டாக சேர்ந்து இந்திய காவல் பணி அதிகாரிகளின் மனைவிகள் சங்கம் (IPSOWA) என்று ஆரம்பித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரின் மனைவி ப்ரியம்வதே பொருளாளராக உள்ளார்.
இந்த நிலையில் முதன்முறையாக திருப்பத்தூர் மாவட்டத்தில் நலத்திட்டங்களை வழங்க வேண்டும் என்று முடிவு செய்து திருப்பத்தூரில் உதவும் உள்ளங்கள்,காந்தி முதியோர் இல்லம் வாணியம்பாடி கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோருக்கு 270ஆண் மற்றும் பெண்களுக்கு போர்வைகள், படுக்கைகள் உள்ளிட்டவைகளை வழங்கினார். அப்போது பேசிய ப்ரியம்வதே கூறுகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் மனைவிகள் கூட்டாக ஒன்று சேர்ந்து தமிழகத்தில் உள்ள ஆதரவற்றோரை நாடி உதவிகள் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.. !!!!
கருத்துகள் இல்லை