Header Ads

  • சற்று முன்

    "ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு கேமராவும் ஆய்வாளர்களுக்கு கேமரா மற்றும் உபகாரங்கள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது

    கடந்த 28.11.2019 ஆம் தேதி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை இராணிப்பேட்டை, வேலூர்,திருப்பத்தூர் மாவட்டங்களாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் நிர்வாக காரணங்களுக்காக பிரிக்கப்பட்டது. இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் சார்பில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதற்காகவும், குற்றங்கள் நடவாவண்ணம் தடுப்பதற்காகவும் கடந்த 15.01.2020 ம் தேதி பிரத்யேக ரோந்து அமைப்பு (Dedicated Beat System) காவல்துறை தலைவர் வடக்கு மண்டலம் திரு.நாகராஜன் இ.கா.ப அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பிரத்தியேக ரோந்து அமைப்பு பொதுமக்களிடம் நல்வரவேற்பை பெற்றதன் காரணமாக இதனை நவீன தொழில்நுட்ப முறையில் மேம்படுத்தவும், திறம்பட செயல்படவும் மாவட்டத்திலுள்ள 1150 பட்டா புத்தகங்களையும் QR CODE மூலமாக Scan செய்யும் ரோந்து கண்காணிப்பு அமைப்பு (Beat Monitoring System-BMS) என்ற செயலி 26.06.2020 ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்களால் துவங்கப்பட்டது. 

    இச்செயலி மூலமாக மாவட்டத்திலுள்ள அனைத்து ரோந்து அலுவலர்களின் பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் காவல்துறையினை நவீனப்படுத்தும் நோக்குடன் ரோந்து காவலர்களுக்கு விபத்துகளை தவிர்ப்பதற்காக ஒளி பிரதிபலிக்கும் ஆடைகள் (Reflected Jackets), போக்குவரத்தினை சீர்செய்ய கோல் விளக்குகள் (Baton Lights), முக்கிய நிகழ்வுகளை பதிவு செய்வதற்காக உடலில் அணியும் கேமராக்கள் (Body Worne Camera's), பொதுமக்கள் மற்றும் காவல்துறையின் பாதுகாப்பினை உறுதி செய்ய டார்ச் லைட்டுகள், ஆய்வாளர்களின் இயக்கம் மற்றும் செயல்பாடுகள் முக்கிய சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஆகியவற்றை கண்காணிக்க வாகனத்தில் பொருத்தும் கேமராக்கள் (Dash Board Camera's) மற்றும் காவல்துறையின் ரோந்து அனைவருக்கும் தெரியும் விதத்தில் (Visible Policing) அமைய வாகனத்தின் மேற்புறத்தில் வண்ண நிறத்தில் எரியும் விளக்குகள் (Blinkers) ஆகியவை சுமார் ரூ.16,00,000 மதிப்பீட்டில் சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து வாங்கப்பட்டு அதனை இன்று (06.10.2020) காவல்துறைத் தலைவர் வடக்கு மண்டலம் திரு.P.நாகராஜன் இ.கா.ப., அவர்களால் துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி.N.காமினி இ.கா.ப., அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் இராணிப்பேட்டை உட்கோட்டம் செல்வி.KT.பூரணி, அரக்கோணம் உட்கோட்டம் திரு.மனோகரன் ஆகியோர் மற்றும் காவல் ஆய்வாளர்கள்,ரோந்து அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். 

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad