• சற்று முன்

    வாலாஜாபேட்டையில் வியாபாரிகள் நல அறக்கட்டளை கட்டிடம் மற்றும் சங்க அலுவலக திறப்பு விழா நடைபெற்றது

    வாலாஜாபேட்டையில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் காமராஜர் தெருவில் புதியதாக கட்டப்பட்ட வியாபாரிகள் நல அறக்கட்டளை கட்டிடம் மற்றும்  சங்க அலுவலக திறப்பு விழா நடைபெற்றது

    இன் நிகழ்ச்சிக்கு வேலூர் மண்டல தலைவர்  ஆம்பூர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார் அறக்கட்டளையின் தலைவரும் வாலாஜாஅனைத்து வியாபாரிகள் சங்க செயலாளருமான ஓய்.அக்பர்ஷரிப் வரவேற்றார் அறக்கட்டளை பொருளாளரும் அனைத்து வியாபாரிகள் சங்க துணைச் செயலாளருமான ஜே. சர்ஜன்ராஜ்ஜெயின் முன்னிலை வகித்தார் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநிலத் தலைவரும் அகில இந்திய வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அறக்கட்டளை புதிய கட்டடத்தை திறந்து வைத்து பேசினார் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில பொருளாளர் கொடியை ஏற்றி வைத்தார் அறக்கட்டளை செயலாளர் வேலு நன்றி கூறினார் நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட வியாபாரிகள் சங்க தலைவர் ஆற்காடு சரவணன் ஒருங்கிணைப்பாளர்கள் கமல்ரகுநாதன், அறக்கட்டளையின் அறங்காவலர் கண்ணன், தங்கராஜ் நாடார், முத்துசாமி நாட்டார், செல்வம், சுரேஷ், நாராயணபுரம் ரூபன் பீஸ் காட்டேஜ் இண்டஸ்ட்ரீஸ் சுந்தர்சிங் உள்பட ராணிப்பேட்டை வேலூர் திருப்பத்தூர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். 


    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad