சோளிங்கர் அருகே நெல் அறுவடை எந்திரத்தை திருடிய 2 பேரை போலீசார் கைது!!!
சோளிங்கரை அடுத்த மேல்வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் புருசோத்தமன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவர் தனக்கு சொந்தமான நெல் அறுவடை எந்திரத்தை நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நிறுத்தியிருந்தார். நேற்று காலையில் பார்த்த போது அறுவடை எந்திரத்தை காணவில்லை. மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.
இதுகுறித்து கொண்டபாளையம் போலீசில் புருசோத்தமன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் திருப்பதியை அடுத்த ராமச்சந்திராபுரம் அருகே புருசோத்தமனின் நெல் அறுவடை எந்திரத்தை 2 பேர் ஓட்டிச் சென்றனர். இதையறிந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் சேலத்தை அடுத்த ஆத்தூரை சேர்ந்த பிரகாஷ் (வயது 27), ஆனந்த் (25) என்பதும், நெல் அறுவடை எந்திரத்தை திருடியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். நெல் அறுவடை எந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை