வாலாஜாபேட்டை சௌராஷ்டிரா சபை சார்பாக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையுடன் இணைந்து ரத்ததான முகாம்
வாலாஜாபேட்டை சௌராஷ்டிரா சபை சார்பாக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 2ம் தேதி அன்று மறைந்த நம் தலைவர் அமரர் திரு டி.ஜி.டி சீனிவாசன் நினைவு நாளை முன்னிட்டு மருத்துவ முகாம் கடந்த இருபது வருடங்களாக நடந்து வருவது அனைவரும் அறிந்ததே அதுபோன்று இந்த வருடமும் தன்னார்வத்துடன் கூடிய சிறந்த மருத்துவ நிபுணர்களால் மருத்துவ முகாம் நடைபெற்றது மேலும்
மூத்தவர்களுக்கு மாதந்தோறும் வழங்கும் ஊக்கத்தொகையும் சபா சார்பாக வழங்கப்பட்டது. இன்னுமொரு சிறப்பு நிகழ்வாக அன்றைய தினம் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையுடன் இணைந்து ரத்ததான முகாம்
**கர்ப்பிணி பெண்களுக்கும் மற்றும் விபத்தில் சிக்கியவர்களுக்கு பயன்படும் வகையில் அமையும் என வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் ரத்த வங்கி தலைவர் டாக்டர் கீர்த்தி கூறுகையில்
*நாம் கொடுக்கும் ரத்தம் சிலரின் உயிரை காப்பாற்றும்*.
அதோடு அந்த ரத்தம் மீண்டும் நமக்கு ஊர தொடங்கிவிடும் ..
இந்த ரத்த தானம் முகாமில் ஆர்வம் மிக்க இளைஞர்கள் & மகளிர் கலந்து கொண்டு இன்று பிறந்தநாள் காணும் செயலாளர் என்.டி.சினிவாசன் முதல் நபராக ரத்ததானம் வழங்கி துவக்கிவைத்தார் உடன் சவுராஷ்டிரா சபா நிர்வாகிகள் துணை தலைவர் ஜி.கே.முர்த்தி மற்றும் நகர பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
கருத்துகள் இல்லை