• சற்று முன்

    நடிகர் வடிவேல் காமடி பாணியில் மூதாட்டியிடம் 10 சவரன் அபேஸ்


     தண்டையார்பேட்டை: நடிகர் வடிவேல் நகைச்சுவை பாணியில் மூதாட்டியிடம் 10 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தண்டையார்பேட்டை கைலாசம் தெரு குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த பொன்னம்மாள் (65), அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர், உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது 10 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை பையில் போட்டு, கடையின் கல்லா பெட்டியில் வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இவரது கடைக்கு வந்த மர்ம ஆசாமி 6 பாட்டில் குளிர்பானம் கேட்டுள்ளார். பொன்னம்மாள் அதை எடுக்க சென்றபோது, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஆசாமி, கல்லா பெட்டியை திறந்து, அதில் வைத்திருந்த நகை, பணத்தை எடுத்து மறைத்து வைத்துக்கொண்டார்.சிறிது நேரத்தில் குளிர்பானத்தை எடுத்து வந்து அந்த ஆசாமியிடம் கொடுத்த பொன்னம்மாள், அதற்கான பணத்தை கேட்டபோது, வீட்டிலேயே பணத்தை மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டேன் பாட்டி. சிறிது நேரத்தில் பணத்துடன் வருகிறேன், என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனிடையே, பொன்னம்மாள் கல்லாபெட்டியை திறந்து பார்த்தபோது நகை, பணம் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தண்டையார்பேட்டை குற்றப்பிரிவு போலீசில் பொன்னம்மாள் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். வடிவேல் பாணியில் மூதாட்டியிடம் நகை, பணத்தை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad