• சற்று முன்

    உலக பொதுமக்களின்விபத்து தடுப்பு தினம்


    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் உலக விபத்து தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது நம் நாட்டில் 2019 ஆம் ஆண்டில் சுமார் 4 லட்சத்து 37 ஆயிரத்து 396 சாலை விபத்துகள் நடந்துள்ளன இதில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 732 நபர்கள் உயிரிழந்துள்ளனர் மேலும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 262 நபர்கள் காயமடைந்துள்ளனர் 

    விபத்துக்கான முக்கிய காரணங்களாக வேகமாக வாகனம் ஓட்டுதல் 59%  மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் அலைபேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுதல் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் சாலை விதிகளை கடைபிடிக்காமல் வாகனம் ஓட்டுதல் ஆகியவை கருதப்படுகின்றன மேற்கண்ட காரணங்களை தவிர்ப்பதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதல் உதவி செய்தல் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை ஊர்தியை அழைத்தல் அந்த வாகனத்தில் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்பாக காலதாமதமின்றி அனுப்பி வைத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது ஏற்கனவே தமிழக முதலமைச்சர் அவர்களால் கடந்த மாதம் துவக்கி வைக்கப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய விபத்துத் தீவிர சிகிச்சை பிரிவு உலக விபத்து தடுப்பு தினமான இன்று பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது இந்த உலக விபத்து தடுப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் சிங்காரவேலு தொடர்பு அலுவலர் டாக்டர் பிரகாஷ் ஐயப்பன், மகப்பேறு டாக்டர் உஷா நந்தினி, விபத்து பிரிவு டாக்டர் கீர்த்தி, டாக்டர் வெங்கடேஸ்வரன், மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad