• சற்று முன்

    வேலூர் மாவட்டத்தில் தமிழக சட்டம் (ம) ஒழுங்கு காவல் துறை கூடுதல் இயக்குனர் ராஜேஷ்தாஸ் நேரில் ஆலோசனை கூட்டம்


    வேலூர் மாவட்டத்தில் தமிழக சட்டம் (ம) ஒழுங்கு காவல் துறை கூடுதல் இயக்குனர் ராஜேஷ்தாஸ்  இ.கா.ப அவர்கள் வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்களுக்கு  காவல்துறையினரால்   நடைமுறைப்படுத்தப்படும் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் மனுக்களை விரைந்து முடிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.மேலும், காவல்துறையினரால் பொதுமக்களுக்கு செயல்படுத்தப்படும்  நலத்திட்ட உதவிகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வேலூர் சரக காவல் துணை தலைவர்.காமினி  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அவர்கள், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அவர்கள், வேலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் வேலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணப்பன் அவர்கள், வேலூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் .ஆல்பட் ஜான் தனிப் பிரிவு ஆய்வாளர் அசோகன் அவர்கள், மூன்று மாவட்டத்தைச் சேர்ந்த காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad