• சற்று முன்

    1,301 வாக்குச்சாவடி மையங்கள் வரைவு பட்டியலை வெளியிட்டு கலெக்டர் தகவல்

    வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் முன்னிலை வகித்தார். இதில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் பட்டியலை வெளியிட்டார்.

    பின்னர் கலெக்டர் சண்முகசுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் 5 வழிமுறைகளை தெரிவித்துள்ளது.

    அதன்படி, 1,500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் 2 ஆக பிரித்து புதிய வாக்குச்சாவடி அமைக்கப்பட வேண்டும். வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் பழுதடைந்த பழைய கட்டிடத்தில் உள்ள வாக்குச்சாவடிகளை அதே வளாகத்தில் புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட வேண்டும். அதே வளாகத்தில் புதிய கட்டிடம் இல்லையெனில் அதே பகுதியில் உள்ள வேறு அரசு, தனியார் கல்லூரி, பள்ளியில் மாற்றப்பட வேண்டும்.

    ஒரு வாக்குச்சாவடி வளாகத்தில் உள்ள 2 வாக்குச்சாவடிகளை 1,500 வாக்காளர்களுக்கு மிகாமல் ஒன்றிணைக்கப்பட வேண்டும். இரு வாக்குச்சாவடிகளில் அதிகமாக வாக்காளர் உள்ள வாக்குச்சாவடியில் இருந்து அதே பகுதியில் குறைந்த வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடியில் அந்த வாக்குச்சாவடிக்கான பகுதிகள் இணைக்கப்பட வேண்டும். ஒரு வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளி பெயர் மாற்றப்பட்டிருப்பின் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

    இந்த வழிமுறைகள் வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் இருக்கும் 1,300 வாக்குச்சாவடிகளில் பின்பற்றப்பட்டு உள்ளது. புதிதாக அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருமலையில் மலைவாழ் மக்களுக்காக புதிய வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது மாவட்டத்தில் 1,301 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. மேற்கண்ட 5 வழிமுறைகளிள் அடிப்படையில் 181 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    காட்பாடி தொகுதியில் 248 மையங்களும், வேலூரில் 244 மையங்களும், அணைக் கட்டில் 265 மையங்களும், கே.வி.குப்பத்தில் (தனி) 254 மையங்களும், குடியாத்தத்தில் 290 மையங்களும் உள்ளன. இந்த பட்டியல் குறித்து அரசியல் பிரமுகர்களிடம் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர், பொதுமக்கள், தன்னார்வலர்கள் போன்றோர் ஏதேனும் ஆட்சேபனை அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால் 7 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 


    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad