• சற்று முன்

    கோவில்பட்டியில் மதிமுக வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சௌபாக்யா மஹாலில் மதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள் பவுன் மாரியப்பன், தாயகம் செல்வராஜ், குருசாமி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


    மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயகா ரமேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்று தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். கூட்டத்தில்  தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 3 தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் 5 பேர் கொண்ட வாக்குச்சாவடி முகவர்கள் அமைப்பது, நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மூலமாக வழங்கி மற்ற மாவட்டங்களுக்கு முன் உதரணமாக இருந்த போல தற்பொழுதும் சிறப்பாக செயல்பட்டு பொதுச்செயலாளர் பாராட்டு பெறும் வகையில் செயல்படுவது, வாக்குச்சாவடி முகவர்கள் குழு அமைத்தும், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தினை கூட்டடி தேவையான ஆலோசனைகள் மற்றும் பயிற்சி வழங்குவது என்றும், நகரம், ஒன்றியத்தில் அடுத்த மாதம் 25;ந்தேதிக்குள் வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் செய்து மாவட்ட கழகத்தில் வழங்குவது மட்டுமின்றி, தேர்தல் பணிகளை தொடங்குவது குறித்து தீர்மானம் செய்யப்பட்டது. கூட்டத்தில் மதிமுக நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் மதிமுக கோவில்பட்டி நகர செயலாளர் பால்ராஜ் நன்றி கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad