Header Ads

  • சற்று முன்

    சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 221ஆவது நினைவு நாள்: அமைச்சர் கடம்பூர் செ.ராஜு உள்பட அரசியல் கட்சியினர் மரியாதை

    சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221ஆவது நினைவு நாளையொட்டி தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் அவரது சிலைக்கு  அமைச்சர் கடம்பூர் செ.ராஜு உள்பட திரளானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளை முன்னிட்டு கயத்தாறில் அவர் தூக்கிலிடப்பட்ட நினைவிடத்தில் உள்ள அவரது படத்துக்கும், அருகே மணிமண்டபத்தில் உள்ள முழு உருவச்சிலைக்கும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சத்யா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அப்போது, கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் பாஸ்கரன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், அதிமுக ஒன்றிய செயலர் வினோபாஜி, பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர் சுப்புராஜ் உள்பட அதிமுக நிர்வாகிகள் திரளானோர் உடனிருந்தனர்.

    வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை சார்பில் 221ஆவது நினைவு நாள் புகழஞ்சலி நடைபெற்றது. நிகழ்ச்சியில், மதிமுக மாவட்டச் செயலர்கள் ஆர்.எஸ்.ரமேஷ் (தூத்துக்குடி வடக்கு மாவட்டம்), புதுக்கோட்டை செல்வம் (தெற்கு மாவட்டம்), கே.எம்.ஏ.நிஜாம் (நெல்லை மாநகர் மாவட்டம்), ரேமண்ட் (நெல்லை புறநகர் மாவட்டம்) ஆகியோர் கட்டபொம்மன் படத்துக்கும், சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில், மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினர் விநாயகா ரமேஷ், கோவில்பட்டி நகரச் செயலர் பால்ராஜ், ஒன்றியச் செயலர் அழகர்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    டாக்டர் ஆர்.எம்.ஆர். பாசறை சார்பில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் பா.ராமமோகனராவ் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில், திண்டுக்கல்லைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, வேங்கடவிஜயன், விடுதலைக் களம் நாகராஜன், முத்துவேல்ராஜன், பிரேம்குமார், ஜெயகுமார் உள்பட டாக்டர் ஆர்.எம்.ஆர். பாசறை, நாயக்கர் நாடு பேரவையைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் கே.எஸ்.குட்டி, பொருளாளர் செண்பகராஜ் ஆகியோர் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக மாவட்டத்தலைவர் வலசை கண்ணன், கோவில்பட்டி கம்மவார் சங்கத் தலைவர் வெங்கடேசன் சென்னக்கேசவன், பாட்டாளி மக்கள் கட்சி மாநிலத் துணைச் செயலர் ராமச்சந்திரன், திராவிட முன்னேற்றக் கழக ஒன்றியச் செயலர் சின்னப்பாண்டியன், தமிழ் மாநில காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவர் கதிர்வேல், தெலுங்கு தமிழ் தேசிய கட்சியினர், தமிழ்நாடு தெலுகு ஜனா சேவா சேனா நிர்வாகிகள் உள்பட அரசியல் கட்சியினர், வீரசக்கதேவி ஆலயக் குழுவைச் சேர்ந்த முருகபூபதி மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த சமுதாயத்தினர் திரளானோர் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad