கோவில்பட்டி அருகே கார் மோதியதில் 10 ஆடுகள் உயிரிழந்தன.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தோணுகாலை சேர்ந்த மருதன் மகன் கார்த்திக். ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தனக்கு சொந்தமான 65 ஆடுகளுடன், இளையரசனேந்தல் உள்ள பாறைபட்டி காட்டுப்பகுதியில் ஆடு மேய்ச்சலுக்கு விட்டார். கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் சாலையில் ஆடுகளுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து ஆடுகள் மீது மோதியது. இதில் 10 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்தன. 35 ஆடுகளுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை