Header Ads

  • சற்று முன்

    NHAI தேசிய நெடுஞ்சாலை உதவி எண் 1033 தமிழ் மொழியில் பேச வேண்டும்அனைத்து வாகன ஓட்டுனர்கள் நல சங்க செயற்குழுவில் தீர்மானம்




    தமிழ்நாடு அன்னை தெரசா அனைத்து வாகன ஓட்டுனர்கள் நலச்சங்க செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி சமயபுரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். வழக்கறிஞர் பகுத்தறிவாளன் வாழ்த்துரை வழங்கினார். செயலாளர் கண்ணன், துணைத் தலைவர் கணேசன், இணைச் செயலாளர் வரதராஜன், பொருளாளர் சண்முகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் செயற்குழு கூட்டத்தில் இந்திய குடிமகனுக்கு உள்ள உரிமை ஓட்டு உரிமை தான். அரசாங்க வாகன ஓட்டுனர்களுக்கு தபால் ஓட்டு உள்ளது போல் தனியார் வாகன ஓட்டுநர்களுக்கும் தபால் ஓட்டு உரிமையை வழங்க வேண்டும்.

    NHAI நெடுஞ்சாலையில் உதவி எண் 1033 தொடர்பு கொண்டால் ஹிந்தி மொழியில் மட்டுமே பேசப்படுகின்றன. இதனால் தமிழக வாகன ஓட்டுனர்கள் மொழி புரியாமல் உள்ளார்கள். எனவே டோல் ஃப்ரீ தொலைபேசி எண்ணில் தமிழ் மொழியையும் பேசக்கூடிய நபர்களை பணியில் அமர்த்த வேண்டும் கரோனா காலத்தில் இலகுரக வாகனங்கள் இயங்காமல் இருந்ததனால், அதற்கான ஐந்து மாத தவணையை தள்ளுபடி செய்ய வேண்டும். வட்டி விகிதத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

    ஆட்டோ மற்றும் இலகுரக வாகனங்கள் ஓட்டும் ஓட்டுனர்கள் எரிபொருள் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளார்கள். எரிபொருள் விலை ஏற்றத்திற்கு தகுந்தாற் போல் வாடகையும் ஏற்ற வேண்டும். மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் இருந்து மண்மேடு செல்லும் வழித்தடங்களிலும்  கர்நாடக மாநிலம் பெல்காம் இலிருந்து பாம்பே செல்லும் வழித்தடங்களிலும் துப்பாக்கி முனையில் திருட்டு, கொலை கொள்ளை அதிகமாக நடைபெறுகிறது இதற்கு அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    திருச்சி மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், துணைத் தலைவர் பிரபாகரன், பொருளாளர் தனிஷ் தர்மா,  துணைச் செயலாளர் ரமேஷ், ஒருங்கிணைப்பாளர் செந்தில், செயற்குழு உறுப்பினர்கள் மனோஜ், சந்துரு, ராமலிங்கம், ரமேஷ், மாவட்ட மகளிரணி செயலாளர் பேபி ராணி, சென்னை மாவட்ட தலைவர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் சசிகுமார், பொருளாளர் வடிவேல், துணைத் தலைவர் ஜோசப், இணைச் செயலாளர் சந்திரசேகர், ஒருங்கிணைப்பாளர் சாத்ராக் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad