வாலிபர் வெட்டிக் கொலை: தூத்துக்குடியில் பரபரப்பு.
தூத்துக்குடியில் முன் விரோதத்தில் வாலிபரை சக ஊழியர் ஒருவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி சில்வர்புரத்தைச் சேர்ந்தவர்கள் ரங்கநாதன் மகன் நந்தகுமார் (42), வேதமுத்து மகன் ஜார்ஜ் (45). இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள பர்னிச்சர் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். அப்போது தொழில் சம்பந்தமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜார்ஜை கம்பெனியில் இருந்து வேலையை விட்டு நீக்கிவிட்டார்களாம். இதனால் நந்தகுமார் மீது ஜார்ஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் பைக்கில் வந்து கொண்டிருந்த நந்தகுமாரை, ஜார்ஜ் கண்ணில் மிளகாய் பொடியை தூவி அவரை தாக்கியுள்ளார். பின்னர் அரிவாளால் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
தூத்துக்குடி சிப்காட் போலீசார் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. கொலையாளி ஜார்ஜை தேடி வருகின்றனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், ரூரல் டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட நந்தகுமாருக்கு மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை