ராணிப்பேட்டை மாவட்டத்தில் அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்குத்துவிளக்கு ஏற்றி கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்
உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் அம்மா நகரும் நியாயவிலைக் கடை வாகனங்களை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி கொடியசைத்து துவக்கி வைத்தார்
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் அம்மா நகரும் நியாயவிலைக் கடை வாகனங்களை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் ச. திவ்யதர்ஷினி தலைமை வகித்தார்கள்..
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறையின் மூலம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் மக்களின் குடியிருப்புக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்கும் பொருட்டு 3501 அம்மா நகரம் நியாய விலைக்கடைகள் 9.66 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்படும் என அறிவித்தார். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 21.9. 2020 அன்று சென்னையில் துவக்கி வைக்கப்பட்டது அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 32 அம்மா நகரும் நியாயவிலை கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது ராணிப்பேட்டை மாவட்டத்தில் 613 நியாயவிலை கடைகள் உள்ளன. மொத்த குடும்ப அட்டைகள் 3,24,804 உள்ளன. 32 அம்மா நகரும் நியாயவிலை கடைகளில் 1497 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைய உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்களால்
V.C மோட்டூர் அசோக் கார்டன் நியாய விலை கடை 225 குடும்ப அட்டைகள், விசாரம் பாக்தினி காலனி நியாய விலை கடை 254 குடும்ப அட்டைகள், புதுப்பாடி காலனி ஜி. எம். நகர் நியாய விலை கடை 300 குடும்ப அட்டைகள் என அம்மா நகரும் நியாய விலை கடை இயங்கும் இடத்தின் பெயர் பலகை ஒன்றில் அனைவரும் அறியும் வண்ணம் ஆக அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நாள் குடும்ப அட்டைதாரர்கள் வசிக்கும் பகுதி கடை செயல்படும் முன்னால் உள்ளிட்ட விவரங்களுடன் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிட்ட நாளில் பொருட்களை பெற்றுக் கொள்ளமுடியாத குடும்ப அட்டைதாரர்கள் வேறு நாட்களில் தாய் கடையில் கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர்.ரவி, சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத், உமா கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சி முகமை), ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன்,
இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் திருகுணஐயப்ப துரை, கோமதி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்,ஆவின் தலைவர் வேலழகன், சுமைதாங்கி ஏழுமலை மாவட்ட கற்பகம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர், ராமு, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், ஜெயப்பிரகாஷ் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
கருத்துகள் இல்லை